பிரபாஸ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கல்கி இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பாட்னி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கமலஹாசனின் சம்பளம் ரூ. 150 கோடி பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான கல்கி படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த வீடியோவில் கமலஹாசன் எந்த ஒரு காட்சியிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கமலஹாசனின் நடிப்பு மற்றும் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்கி படம் குறித்து கமல்ஹாசன் ஒரு பேட்டி ஒன்றில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் இந்த கல்கி படத்தில் நான் வில்லனாக நடிக்கிறேன் இப்படத்தில் கதாநாயகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவிற்கு வில்லனுக்கும் இப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்றும் மேலும் கல்கி படத்தில் நான் நடிப்பது குறித்து யாரும் நம்பவில்லை கூறியுள்ளார்.