கபூர் இவர் மனதை படிக்கும் AI ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.டெல்லியை பிறப்பிடமாக கொண்ட கபூர் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) மாணவர் ஆவர், செயற்கை நுண்ணறிவு (AI)- இயக்கப்பட்ட ‘மனதைப் படிக்கும்’ ஹெட்செட்டான ‘AlterEgo’ எனப்படும் நுட்பத்தை கண்டு பிடித்து அசதியுள்ளார்.
2018ஆம் ஆண்டு முதல் முதலில் அறிமுகம் படுத்தப்பட்டது.இந்த AI மூலமாக பிற நண்பர்களுடன் வார்த்தைகளால் பேசுவதை விட நம் மனதில் நினைத்து மனதுக்குள்ளேயே உச்சரிப்பதன் மூலம் உரையாடல்கள் தொடங்குகிறது.இந்த சாதனத்தை அணிந்த பிறகு எந்த உரையாடலும் இல்லாமல் பிட்ஸா அல்லது சப்வே ஆர்டர் செய்யலாம் என்பதே இதம் பொருலாகும்.
MITயின் படி ALTEREGO என்பது ஆக்கிரமிப்பு இல்லாததால் அணியக்கூடிய, புற நரம்பியல் இண்டர்பேஸ் ஆகும்.இந்த செயற்கை நுண்ணறிவு சேவைகள், உதவியாளர்கள்,மற்றும் பிற நண்பர்களுடன் இயற்கையான மொழியில் உரையாடல் அனுமதிக்கிறது அதாவது நாம் எந்தவொரு பேசுதல் இல்லாமல் ,வாயைத்திறக்காமல்,சொற்கள் ஏதும் உபயோகிக்காமல் நம் மனதில் நினைப்பதை வைத்தே இது செயல் படுகிறது.
இது நமது BONE CONDUCTION மூலமாகவே செயல்படுகிறது.இது பயன்படுத்துவோரின் இயல்பான செவிப்புல[AUDITORY] அனுபவத்தில் தலையிடாது என்றும்,ஒரு பயன்பாட்டலரின் கணினியுடன் இணைகிறது.அதுமட்டுமின்றி தங்களுக்குலேயே முற்றிலும் உள்முகமாய் பேச உதவுகிறது.சிலர் அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல்தொடர்புகளை வழங்குவதே இந்த கண்டுபிடிப்பின் முக்கிய குறிக்கோள் என சொல்லப்படுகிறது.
இதன் கண்டுபுடிப்பாளர் கபூர் AI நுட்பத்தை பயன்படுத்தப்படும் வீடியோ சமுக வலைதங்களில் தற்போது வைரல்லாகி வருகிறது. அதுமட்டுமின்றி நேர்காணல் ஒன்றில் இதை பார்த்தவர்கள் “உங்கள் தலைக்குள் முழு இணையமும் உள்ளது” என்று கூறி திகைப்புடன் பார்த்தனர்.