மிகவும் அரிய மீன்களில் ஒன்று டால்பின் வகை தற்போது இந்த வகை அழிந்து கொண்டு வருவதால், இதை பிடிக்கவோ சாப்பிடவோ அனுமதி இல்லை.நன்னீர் டால்ஃபின் வகையைச் சார்ந்தது. இந்த வகையான டால்பின் அழிவின் விளிம்பில் இருக்கிறது .இந்த அரிய வகையான டால்பின் வகையை மீனவர் ஒருவர் வழியில் சிக்கியதால் சமைத்து சாப்பிட்டுள்ளார் இது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் யமுனை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த வலையில் இந்த அரிய வகையான நன்னீர் டால்பின் அவர் வளையில் சிக்கியுள்ளது. அந்த டால்பின் மீனை நீரில் விடாமல், மீனவர் ஒருவர் அவரது தோளில் தூக்கி சென்று சமைத்து சாப்பிட்டு உள்ளார்.
இது அந்த ஊரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த அரிய வகை மீனை சாப்பிட்ட மீனவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மீதமுள்ள ஐந்து பேரின் மீது வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.