நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இவர் சமீபத்தில் வெளியான விஜயின் லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் நடித்திருந்தார். மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தார். அவரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பேசப்பட்டு வந்தது. தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். நடிகை திரிஷாவும் அவரது எக்ஸ் வலைத்தளத்தில் மன்சூரலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான் உடன் திரைப்படங்கள் நடித்த நடிகை நடிகர்கள் மன்சூர் அலிகான் இந்த சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். பல சினிமா பிரபலங்களும் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்குமாறு அவர்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மன்சூரலிகான் அவரது எக்ஸ் தளத்தில் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்குமாறு ஒரு பதிவை வெளியிட்டார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்ஸ் தளத்தில் மற்றொரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
தான் பேசிய வீடியோவை பார்க்காமல் குற்றம் சாட்டிய நடிகை குஷ்பூ, திரிஷா மற்றும் சிரஞ்சீவியின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் வழக்கு தாக்கல் செய்திருந்தார் அதில் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது அதில் நீதிபதி என். சதீஷ்குமார் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பெண்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனிதர்களின் இயல்பு என்றும், இந்த வழக்கை தொடுத்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணெடுக்கும் நோக்கத்திலும் மற்றும் விளம்பரத்திற்காகவும் இந்த வழக்கை மன்சூர் அலிகான் தொடுத்ததற்காக அவருக்கு ரூ. 1 லட்சம் அபதாரம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.