ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெய்லர்”. இப்படம் நேற்று (10.8.23) அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படமானது அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள நடிகரான மோகன்லால், பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை தாக்கும் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சண்டை எதனால் ஆரம்பித்தது என்று பார்த்தால்! விஜய் ரசிகர்கள் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இல்லை என்றும் சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க என்று கூச்செய்ததால் ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செயல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது .