Home சினிமா நள்ளிரவு 1 மணிக்கு ரஜினியை பார்க்க போயஸ் கார்டன் சென்று 15 வயது சிறுமி – யார் அந்த சிறுமி..?

நள்ளிரவு 1 மணிக்கு ரஜினியை பார்க்க போயஸ் கார்டன் சென்று 15 வயது சிறுமி – யார் அந்த சிறுமி..?

by Pramila
0 comment

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும்…..என்று அனைவருக்கும் தெரிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்திக்க 15 வயது சிறுமி ஒருவர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் அவரது வீட்டுக்கு நள்ளிரவு 1.15 மணியளவில் சிறுமி சென்றுள்ளார்.இவர் அங்கு சென்று அங்கிருந்த காவலாளியிடம் ரஜினிகாந்த்தை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த காவலாளி தேனாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் அங்கு விரைந்துவந்த போலீஸார் சிறுமியிடம் மெதுவாக பேசி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அந்த சிறுமி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமி என்றும் அவர் அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் என்று தெரியவந்தது.சிறுமி பெற்றோரிடம் நான் ஆசிரியரை ஒருவரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு நேற்று முன்தினம் காலை சேலத்தில் இருந்து பேருந்தில் சென்னைக்கு வந்து ரஜினியின் விட்டிற்கு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் தகவலை சிறுமியின் பெற்றோருக்கு தெரியபடுத்தினார்.தகவலறிந்து காவல் நிலையம் வந்த சிறுமியின் உறவினர்களிடம் போலீஸார் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு சிறுமியை அனுப்பிவைத்தனர்.

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign