பிரிட்டனில் கோவிட் வைரஸின் புதிய வகையான எரிஸ் (Eris) என்ற வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.இதனால் தனிநபர் இடைவெளி, கைகளை கழுவுதல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தற்போது அறிவுரை கூறிவருகிறது. புதிய வகையான எரிஸ் (Eris) என்ற வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கூறபடுகிறது இதனால் மக்கள் அச்சத்தில் இருகின்றனர்.
அதுமட்டுமின்றி உலக நாடுகள் மத்தியில் பரவி வரும் புதிய வகையான கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான எரிஸ், இந்தியாவில் பரவுமா இல்லையா என்பது குறித்து நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர் இதை அப்ற்றி அவர்கள் ஆலோசனை என்னவென்றால் இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது.முதல் அலையை ஒப்பிடும் போது இரண்டாம் அலை மிகவும் கடுமையான தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.
இதனால் கொரோனாவின் தாகத்தால் பலலட்ச மக்கள் உயிரிழந்தனர்.இந்த கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை வெளிக்கொண்டுவர அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள், ஊரடங்குகள் கொண்டுவரப்பட்டன.மற்றும் 2 ஆண்டுகள் இந்த நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தது. இரண்டாம் அலையில் இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை சுமார் 4 லட்சமாக இருந்தநிலையில் தடுப்பூசி முகாம்கள், பரிசோதனை, தனிமைபடுதிகொல்லுதல் என பல முயற்சிகள் மூலம் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டது.தற்போது இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் கம்மியாகவே இருந்து வருகிறது.
சுமார் ஒரு வருட காலமாக கொரோனா தொற்று குறைந்துள்ளது ஆனால் தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த புதிய வகை கொரனவிற்கு எரிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வகை இன்னும் இந்தியாவில் தென்படவில்லை என தெரிவித்துள்ளனர்.இந்த புதிய வகை கொரோன இந்தியாவில் மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் இருந்தாலும் இந்த புதிய கொரோன இந்திய மக்களிடையே பரவ வாய்ப்பில்லை என்று பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம், (UKHSA) புதிய எரிஸ் மாறுபாடு ஏழு பேரில் ஒருவருக்கு உறுதி செய்யப்படுவதாகவும், இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் தெரிவித்து இருந்தது.இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, ”கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, இந்த வாரம் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ரெஸ்பிரேட்டரி டேட்டாமார்ட் சிஸ்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 4,396 பேரில் 5.4% நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த வாரத்தை ஒப்பிடும்போது சற்று அதிகரித்துள்ளது” என்றும்,கொரோனாவின் எரிஸ் இந்தியாவில் தொற்றுநோயின் புதிய அலையை ஏற்படுத்த வாய்ப்பில்லை ஏனெனில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஏற்கனவே வைரஸ் எதிர்ப்பு சக்தியை XBB எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸின் எரிஸ் பரவல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தொற்றுநோயைத் தவிர்க்க பொது இடங்களில் அனைவரும் சரியான கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.