நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகை இவர் ஆரம்ப காலத்தில் சில படங்களில் நடித்துள்ளார் அதற்கு பிறகு சினிமாவிற்கும் இதற்கும் மிகப்பெரிய இடைவேளை ஏற்பட்டு விட்டது. இதை தொடர்ந்து சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியிலே மிகவும் பிரபலமானவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பல சர்ச்சைகளில் நடிகை வனிதா விஜயகுமார் அவ்வபோது சிக்கிக் கொண்டே இருந்தார். இதுவரை வனிதா விஜயகுமாருக்கு மூன்று திருமணங்கள் நடந்துள்ளது ஆனால் சில கருத்து வேறுபாட்டின் காரணமாக மூன்று திருமணங்களுமே விவாகரத்து ஆகிவிட்டது இதை தொடர்ந்து தற்பொழுது நான்காவது திருமணம் செய்யப் போவதாக செய்தியாளர்களிடம் வனிதா விஜயகுமார் பதிவு செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பேச்சு பொருளாக மாறி உள்ளது.