பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி ஆயுர்வேதம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. ஆயுர்வேத தேன், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஆயுர்வேத முறைப்படி விற்பனை செய்து வந்தனர். சமீபத்தில் குணப்படுத்தவே முடியாத மரபணு நோய்களுக்கு கூட பதாஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்தலாம் என்று யோகா குரு பாபா ராம்தேவ் விளம்பரத்தை வெளியிட்டார்.
இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் உச்சநீதிமன்றம் பாபா ராம்தேவுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டனர். மேலும் விளம்பரத்தில் வசனங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும் பாபா ராம்தேவ் கண்டுக் கொள்ளாமல் மேலும் மேலும் சர்ச்சைக்குரிய விளம்பரங்களை வெளியிட்டார். இதை தொடர்ந்து பதாஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளரான பாபா ராம்தேவ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து வருகின்ற காலங்களில் உச்சநீதிமன்றம் அளித்த வாக்குகுதியை கடைபிடிப்போம் என்றும் பாபா ராம்தேவ் கூறியிருந்தார். பாபா ராம்தேவின் தரப்பிலிருந்து சரியான முறையில் மன்னிப்பு வரவில்லை என்பதால் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. மேலும் பதாஞ்சலி நிறுவனத்தின் 16 மருந்துகளை தடைவிதித்து உத்தரவைத் திறப்பித்தது உச்ச நீதிமன்றம். மேலும் மருந்து கடை தயாரிக்கும் திவ்யா பார்மசி மற்றும் பதாஞ்சலி நிறுவனங்களின் உரிமையையும் ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.