மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு சில தொழில்நுட்ப விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன்படி மத்திய அரசு மெட்டா நிறுவனத்திடம் whatsapp, facebook போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனாளர்களின் உரையாடல்களை கவனிக்குமாறு அறிவுரை வழங்கியது. இதை தொடர்ந்து சமூக வலைத்தள நிறுவனங்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்ப்பு தெரிவித்தது. மெட்டா நிறுவனமானது டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிவித்த இந்த அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
மெட்டா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இந்தியாவில் மட்டும் Whatsapp – யை 1 மில்லியன் மக்கள் பயன்படுத்துவதாகவும் மெட்டா நிறுவனம் சார்பில் சில விவாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.
உலகிலேயே எந்த நாட்டிலும் இதுபோன்ற சட்டம் அமல்படுத்தவில்லை என்றும் இது போன்ற சட்டம் நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் மற்றும் இலட்சக்கணக்கான செய்திகள் ஆண்டுதோறும் சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எண்ட் டு என்கிரிப்ஷன் – ஐ நீக்க மத்திய அரசு வற்புறுத்தினால் இந்தியாவிலிருந்து Whatsapp செயலி வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.