உலக அளவில் பிரபலமான ஊட்டச்சத்து உணவுகளை தரக்கூடிய நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான செர்லாக் மற்றும் பல ஊட்டச்சத்து உணவுகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். இந்தியாவில் பெருமளவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவாக முதலில் செர்லாக்கை கொடுத்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் பெரியவர்களுக்கும் இந்த செர்லாக் சுவையானது பிடிக்கும். இந்த செர்லாக்கில் உள்ள இனிப்பு சுவையானது அடிக்கடி சாப்பிட தூண்டும் வகையில் அடிமையாகிறது. மேலும் அடிக்கடி சாப்பிட தூண்டும் வகையில் உப்புக்கள் சேர்க்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நெஸ்லே நிறுவனமானது சுவிட்சர்லாந்தை தலமையிடமாக கொண்டுள்ளது. ஆய்வு செய்ததில் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் விற்பனை செய்யப்படும் செர்லாக்கில் உடலுக்கு கேடு விளைவிக்கும் அடிக்டிவ் சுகர் எதுவும் கலக்கப்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவை விற்பனை செய்யப்படும் செர்லாக்கில் ஆபத்தை ஏற்படுத்த கூடும் அடிக்டிவ் சுகர் கலக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தைகள் அதிகளவு சுகர் எடுத்துக் கொள்ளும் பொழுது உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்களும் ஆய்வாளர்களின் எச்சரிக்கின்றனர். இதை தொடர்ந்து நெஸ்லே நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.