பெங்களூருவில் கப்பான் பார்க், ரேஸ் கோர்ஸ் சதுரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் புறாக்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இதை காணும் மக்கள் வாகனங்களில் செல்பவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு புறாக்களுக்கு உணவுகளை வைப்பது வழக்கமாக வைத்துள்ளனர். உயிரினங்களுக்கு உணவு வைப்பது சிறந்த செயல் என்றாலும் புறாக்களின் இறகுகளால் மனிதர்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட கொடிய நோய் ஏற்படும் அபாயம் நிலவுவதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே மாநகராட்சி புறாக்களுக்கு உணவு வைப்பதை தடைவிதித்துள்ளது. மேலும் சாலை ஓரங்களில் காணப்படும் புறாக்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள் உணவு வைப்பதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதன் காரணமாகவும் மாநகராட்சி இதுபோன்ற தடைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் சதுரங்கத்தில் தற்பொழுது அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அந்த அறிவிப்பு பலகையில் புறாக்களுக்கு உணவு வைப்பவர்கள் ரூ. 200 அபதாரம் விதிக்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த செய்தி மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.