நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 756 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் உலக நாடு மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. தற்பொழுது கொரோனா தொற்றினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,049 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய சுகாதாரத்துறை பல வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு வருகிறது மேலும் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.