Home » Blog » கூடைப்பந்தாட்ட வீரரின் காலணிகள் 66  கோடிக்கு ஏலம் 

கூடைப்பந்தாட்ட வீரரின் காலணிகள் 66  கோடிக்கு ஏலம் 

by Pramila
0 comment

அமெரிக்காவின் பிரபலமான கூடைப்பந்தாட்ட வீரரான மைக்கேல் ஜோர்டான்  பயன்படுத்திய காலனிகள் ஏலத்தில் விடப்பட்டது .  இந்த ஏலத்தில் ஆறு ஜோடி ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் சுமார் இந்திய மதிப்பில் 66 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக அமெரிக்காவின் சதபி ஏல நிறுவனம்  அறிவித்துள்ளது . 

சாதாரணமாகவே ஒரு விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திய பொருட்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அந்த வகையில் கூடைப்பந்து வீரரான ஜோர்டான்  பயன்படுத்திய ஏர் ஜோர்டான்  மாடல் ஷூக்கள்  1991, 1992, 1993 , 1996 , 1997 , 1998 ஆண்டுகளின் போது சாம்பியன்ஷிப் போட்டிகளில் பயன்படுத்தியது. இந்த காலணிகளை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு  ஏலத்தில் எடுத்துள்ளனர் . 

இந்த ஏலத்தைப் பற்றி சதபி தெரிவித்தது ஜோர்டான்  இந்த  உலகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் குறியீடாகவும் மற்றும் அவரது புகழின்  குறியீடாகவும் தற்போது  இது அமைந்துள்ளது  என்று தெரிவித்தனர். சேலத்தில் காலணிகளை யார் வாங்கியது என்பது குறித்து தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை . ஜோர்டான்  இதுவரையில் ஐந்து முறை மதிப்புமிக்க வீரர்  விருது  மற்றும் இரண்டு முறை ஒலிம்பிக் தங்க பதக்கம்,  கூடை பந்தாட்ட விளையாட்டுக்கு ஒரு தரத்தை நிர்ணயித்தவர் என புகழாரம் சூட்டில் மதிப்புமிக்க வீரர் விருது பெற்றவர் . பின்னர் அவரது பெயரிலேயே மாற்றப்பட்டது.

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.