உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். whatsapp மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை திடீரென்று முடங்கியதால் பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
நேற்று இரவு முதல் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படாததால் ஆயிரக்கணக்கான பயனாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். செயலியை லாகின் செய்ய முடியாமல் பயனாளர்கள் முயற்சித்துக் கொண்டே இருந்தனர். இதைத்தொடர்ந்து whatsapp செயல்படாததனால் அமெரிக்காவில் சுமார் 12,000 பேர் புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவை பொருத்தவரை 20,000 மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் இங்கிலாந்தில் சுமார் 46 ஆயிரம் மற்றும் பிரேசிலில் 42,000 பயனாளர்கள் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சில மணி நேரத்திற்கு பிறகு வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இதுபோன்ற சிக்கல் ஏற்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான செயலி முடங்குவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்கள் சிக்கலை சந்தித்தது தற்பொழுது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் செயலி முடங்கியதால் பயனாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.