புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது இதன் காரணமாக உலக நாடுகள் முழுவதும் கலக்கத்தில் உள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் ஜேஎன்.1 தீவிரமாக பரவி வருகிறது. இதன் தாக்கமானது குறைவாக இருப்பினும் பரவும் தன்மை அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்தியாவின் புதிய கொரோனா வைரஸ் ஆன ஜேஎன்.1 நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்த கொரோனா வைரஸின் எண்ணிக்கை குளிர் காலம் தொடங்கிய நிலையில் இருந்து இரு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் 269 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனா வைரஸ்னால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2,556 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை நிலவரப்படி கேரளாவில் இரண்டு பேரும் கர்நாடகாவில் ஒருவரும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ்னாள் உயிரிழந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லும்பொழுது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.