தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே சளி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மருத்துவமனையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சளி மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கும் நோயாளிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வைரஸ் காய்ச்சலினால் வந்தவர்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தற்பொழுது 9 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் 58 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவருக்கு பல்வேறு இணை நோய்கள் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் செல்லும் பொழுது முக கவசம் கண்டிப்பாக அமைய வேண்டும் என்றும் சளி இருமல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.