டெல்லியில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகள் அலுவலகங்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது அரசு.
நாட்களாக டெல்லி இமாச்சலப் பிரதேஷ் அரியானா பஞ்சாப் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் கன மழை பொழிந்து வருகிறது அதனால் சாலை எங்கும் ஆறு போல காட்சி அளிக்கிறது. டெல்லியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சுத்திகரிப்பு நிலையங்களில் மலை நீர் சூழ்ந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த கனமழை காரணமாக ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து தண்ணீர் திறக்கும் அளவு அதிகரித்துள்ளது. வெளியேற்றப்படும் தண்ணீர் அரியானா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணைக்கு வந்துள்ளது. அங்கே இருக்கும் தண்ணீர் வினாடிக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கன அடி நீராக,யமுனை ஆற்றிற்கு திறந்துவிடப்படுகிறது.
யமுனை ஆற்றல் வேறு தடுப்பனையோ, அனையோ இல்லாததால் அங்கு வரும் தண்ணீர் அனைத்தும் டெல்லியை நோக்கி வருகிறது.இதனால் டெல்லி வெல்லமாக காணப்படுகிறது.இதுவரையில் இல்லாத அளவிற்கு 45 ஆண்டுகளில் இல்லாத நீர்மட்டம் 207.55 மீட்டரை எட்டியுள்ளது.இங்கு நீரானது டெல்லியில் இருக்கும் குடியிருக்கும் பகுதிக்குள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
டெல்லி கன மழை காரணமாக மெட்ரோ ரயில் நிலையத்தின் அணுகு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ரயில் நிலையத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயிலை தற்போது தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது பல கிலோமீட்டர் தூரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இந்த நிலையை வசிராபாத் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை டெல்லி முதலமைச்சரின் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையின்றனர். பார்வையிட்ட பின்பு இதனால் டெல்லியில் சில பகுதிகளில் புலி தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அவர் கூறினார். இந்த கனமழை காரணமாக டெல்லியில் பள்ளி கல்லூரி அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது, கனமழை காரணமாக கனரா வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய டெல்லி அரசு தடை விதித்துள்ளது.