ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் விவசாய நிலத்தில் கலை எடுக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அதிர்ஷ்டவசமாக அவருக்கு தேன் நிறத்திலான கல் ஒன்று கிடைத்தது.
அந்த கல்லை பார்த்ததும் அந்த பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட்டது இதைத் தொடர்ந்து அந்த கல்லை நகை கடைக்கு சென்று பரிசோதித்துள்ளார் அப்பொழுது அந்த கடை உரிமையாளர் அந்த கல் வைரக்கல் என்று கூறியுள்ளார்.
அந்தப் பெண்ணிடம் இருந்து வைரக்கல்லை நகைக்கடை வியாபாரி 25 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். வயல்வெளியில் வைரம் கிடந்தது அந்த ஊர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்திக்கு பின்பு வயல்வெளியில் ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வைரக்கல்லை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை அறிந்து பக்கத்து ஊர் மத நாதபுரத்தை சேர்ந்த விவசாயி அவர் குடும்பத்துடன் அவர் விளைநிலத்தில் வைரக்கல் எதுவும் கிடைக்கின்றதா என்று தீவிரமாக தேடி உள்ளார். அவருக்கு இரண்டு வைரக்கல் கிடைத்தது. இதை அறிந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு வைரக் கல்லை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.