பீகாரில் கோபால்கஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் மோமோஸ் சாப்பிடும் போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த போட்டியில் யார் அதிகமாக மோமோஸ் சாப்பிடுபவரே வெற்றியாளர். அந்த வகையில் அந்த இளைஞர் ஒரே நேரத்தில் 150 மோமோஸ்களை சாப்பிட முயற்சி செய்துள்ளார். அப்பொழுது தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞர் சிஹார்வா கிராமத்தைச் சேர்ந்த விபின் குமார் மஞ்சி இவருக்கு 25 வயது, இவர் ஒரு செல்போன் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்த இளைஞர் கடந்த வியாழக்கிழமை வேலையை முடித்துவிட்டு நண்பர்களுடன் மோமோ சாப்பிடும் போட்டியில் ஈடுபட்டுள்ளார். எதுவுமே அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது அது உயிருக்கு ஆபத்தை கொடுக்கும் அது போன்று தான் இதுவும் குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான மோமோஸ் சாப்பிட்டதனால் இவர் உயிருக்கு ஆபத்தாகி விட்டது.
உடனே கூட இருந்த நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது மருத்துவர்கள் அவரை பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக கூறியுள்ளனர். இதை தொடர்ந்து அந்த இளைஞரின் தந்தை விஷம் வைத்து மகனை கொன்று விட்டதாக போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது.