இந்தியாவில் இருந்து வெளி நாடுகளுக்கு படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.இந்த நிலையில் சுஸ்ருன்னியா,என்ற மாணவி இந்தியாவில் இருந்து அங்குள்ள ஹீஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்து வருகிறார். தற்போது அவர் கல்லூரி படிப்பை முடித்து இன்டர்ன்ஷிப் பயிற்சி செய்து வருகிறார்.
இந்தநிலையில் சம்பவம் நடைபெற்ற நாள் அன்று ஜான்ஜசிண்டோ நினைவு இடத்தை பார்வையிட சென்றுள்ளார்.அப்போது திடிரென்று அவரை மின்னல் தாக்கியுள்ளது.மின்னல் தாக்கியதால் சுஸ்ருன்னியா அருகில் இருந்த குளத்தில் விழுந்துள்ளார்.இதை பார்த்த அருகில் இருந்தவர்கள்.அந்த மனைவியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்.மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது என்றும்,இதனால் அவரது மூளை பாதிக்கப்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.அமெரிகாவில் மனைவிக்கு இன்னும் மருத்துவர்கள் சிகிச்சை செய்து வருகிறார்கள்.இந்த தகவல் அறிந்து இந்தியாவில் இருக்கும் அந்த மனைவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் கவலையுடன் உள்ளார்கள்.