அறுவை சிகிச்சை செய்வதற்கு சாதாரணமாகவே ரத்தம் தேவைப்படுகின்ற நிலையில் , ரத்தம் சிறிதளவு கூட வழங்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யும் முறையை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இந்த செயலானது இதயம் மட்டும் அறுவை சிகிச்சை மருத்துவத்துறையில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது . ஆசியாவிலேயே முதல் முறையாக அகமதாபாத்திற்கு உள்ள மேரிங்கோ சிம்ஸ் மருத்துவமனையைச் (Marengo CIMS Hospital) சேர்ந்த மருத்துவர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர் .
சாதாரணமாகவே அடுத்தவர்களின் ரத்தம் பரிமாற்றம் செய்யும் பொழுது சில ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படுகிறது . அத்தகைய எந்தவிதமான பிரச்சனைகளும் சிக்கல்களும் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த புதுமையான ரத்தம் இல்லாத இதய மற்றும் அறுவை சிகிச்சை உதவுகிறது . எனவே இது அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ துறையில் இத்தகைய முன்னேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . பொதுவாகவே இதய சிகிச்சை என்பது ஒரு சவாலான அறுவை சிகிச்சையாகும் . ஒருவரின் இதயத்தை பயனாளிக்கு சரியாக பொருத்த வேண்டும் . எந்த வகையிலும் சிக்கல்கள் ஏற்படாத வகையில் பொருத்த வேண்டும் . அகமதாபாத் மருத்துவர்கள் செய்துள்ள புதுமையான இதய அறுவை சிகிச்சை நவீன மருத்துவ உலகத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது .