ஜப்பானில் சேர்ந்த youtube பிரபலர் ஒருவர் தனது தோற்றத்தை நாய் போன்று உடைய அணிந்து மாற்றி பூங்காவில் வலம் வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவியது.
இதைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தற்பொழுது ஓநாய் போன்ற தோற்றத்தில் சுற்றி வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இவருடைய பெயர் டோருஉவேடா இவர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே ஓநாய் மீது அதிக பற்று இருந்ததால் இதுபோன்று செயலை செய்துள்ளார்.
ஓநாய் போன்று மாற வேண்டும் என்று முடிவெடுத்த அவர் ரூ. 20 லட்சம் செலவு செய்து ஓநாய் போன்ற தோற்றத்தில் ஆடையை வடிவமைத்து பெற்றுள்ளார். ஓநாய் உடை அணிந்து அவர் நடந்து வரும் காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக உள்ளது. இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது மனித உறவுகளிடம் இருந்து விடுபட்டுள்ளதாகவும் வேலை மற்றும் பிற சுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு இது உதவியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த உடை அணியும் பொழுது பவர்ஃபுல் எனர்ஜியாக இருப்பதாகவும் இந்த உடையை அணிந்து நான் செல்லும் பொழுது ஓநாயாக நான் மாறிவிட்டேன் என்று பெருமிதம் கொள்கிறார்.