நம் நாட்டில் பல இடங்களில் பருவமழை தொடங்கிய நிலையில் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால், எப்போது மழை வரும் என்பதை கணிக்க முடியாத நிலையில் உள்ளோம். அனைத்து இடங்களிலும் திகீரென மழை பெய்கிறது. நம் மாநிலத்தில் பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பருவ மலையில் நமது ஸ்மார்ட் போன்களை பாதுகாப்பாக வைத்துஇருப்பது முக்கியம் அதே சமயத்தில் நமது உடல் நலத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம். நம் அனைவரும் நம் கண்ணில் படும் அருமையான காட்சிகளை படப்பிடிப்பது வழக்கம். பழைய காலங்களில் உங்கள் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் டேப் போன்றவைக்கு [WATER – REPELLENT ] பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் நம் செல்போனுக்குள் செல்வதை தடுக்கிறது.
வாட்டர் ப்ரூஃப் பேக்ஸ் அல்லது ஸ்லீவ்ஸ் பயன்படுத்தலாம்
மழைக்காலங்களில் நீங்கள் அடிக்கடி வெளியில் செல்பவராக இருந்தால் உங்களுக்கு இது மிகவும் பயன்படும் .கேஜெட்டுஸ்களை பாதுகாப்பாக வைக்க அவற்றை வாட்டர் ப்ரூஃப் பேக்ஸ் அல்லது ஸ்லீவ்ஸ்களில் வைத்து பயன்படுத்துங்கள்.இந்தக் கவர்கள் உங்கள் செல்போனை மலையில் இருந்து பாதுகாப்பாக வைக்கும். இது வசதியாக பயன்படுத்தவும் முடியும்.
உங்கள் கேஜெட்ஸ்களை நேரடியாக மலையை வெளிப்படுத்தாதீர்கள் முடிந்தவரை உங்கள் கேஜெட்ஸ்களை மழையில் நனைந்து கொண்டோ அல்லது மழை நீரில் படும் மாதிரி உபயோகிப்பதோ மழை பொழியும்போது பயன்படுத்துவதோ தவிர்ப்பது நல்லது. அல்லது கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் மேலே மழை நீர் நேரடியாக படாத படி மூடிய படி பயன்படுத்துவது நல்லது.
சிலிக்கா ஜெல் பேக்ஸ் மழைக்காலங்களில் இது மிகவும் உபயோகமாக இருக்கும். மலைகலங்க்களில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது ஈரப்பதம் கேஜெட்ஸ்களை [CONDENSATION போன்ற MOISTURE] தொடர்பான பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பாக வைக்க சிலிக்கா ஜெல் பேக்களை பயன்படுத்தலாம். இது சுற்றி இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி உங்கள் செல்போனை சுற்றி ஈரப்பதமற்ற சூழலை பராமரிக்க உதவுகிறது.
உங்களது டிவைஸில் தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டால் டேட்டா இழப்பை தடுக்க உங்கள் டிவைஸ்களில் இருக்கும் முக்கிய டேட்டாக்களை கிளவுட் ஸ்டோரேஜ் அல்லது தினசரி அடிப்படையில் பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் மழையில் நனைந்தோ அல்லது வேறு காரணங்களில் மொபைல் போன் பாதிக்கப்பட்டாலும் தகவல்களை பாதுகாப்பாக வைக்கிறது.
கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியும் பொழுது மூடி வைத்த ஜன்னல்களின் இடுக்கு வழியே அல்லது திறந்திருக்கும் ஜன்னல்களின் வழியே மழை நீர் எளிதாக வர வாய்ப்புள்ளது எனவே மாலை நேரங்களில் உங்கள் செல்போனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை தப்பி தவறி உங்களது செல்போனில் மழை நீர் போய்விட்டால் அல்லது தண்ணீர் பட்டு விட்டால் குறிப்பிட்ட டிவைஸை உடனடியாக ஆப் செய்துவிட்டு கவர் அல்லது கேஸ் போட்டு இருந்தால் உடனடியாக அதை அகற்றி விட வேண்டும். பின் துணியை பயன்படுத்தி மெதுவாக செல்போனை துடைத்து அல்லது டிரையர் மூலம் செல்போனை உலர்த்த பயன்படுத்துவார்கள் ஆனால் அப்படி செய்யக்கூடாது ஏனென்றால் செல்போனில் இருக்கும் கார்போநென்ட்ஸ்கலை மனதை சேதப்படுத்தி விடும் இதற்கு பதில் டிபாய்ஸை நன்கு காற்றோட்டமான இடத்தில் சில மணி நேரம் வைத்து விடவும்.
CHARGER போடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்
மழை நேரங்களில் செல்போனை சார்ஜ் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சார்ஜிங் மற்றும் கேபிள்களை ஈரம் இன்றி உலர்ந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் கவனமாக இல்லாவிட்டால் ஷார்ட் சர்க்யூட் ஏற்படலாம். எனவே மழைக்காலங்களில் செல்போனை கவனமாக பயன்படுத்த வேண்டும்.