ஸ்மார்ட்போன் என்பது இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் உபயோகிக்கும் ஒன்றாக மாறிவிட்டது இது நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக வசிக்கிறது. அத்தியாவசிய தேவைக்காக இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்களை ஒரு சில தருணங்களில் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.ஏனென்றால் அத்தானத்தில் உபயோகிக்கும் பொழுது வரும் ஆபத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் செல்போன் பயன்படுத்தாமல் இருந்தால்.
செல்போன் இக்காலகட்டத்தில் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. நாம் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், படிப்பதற்கு, படங்களை மாற்றிக் கொள்வதற்கும், பலருக்கு தொழிலாகவும் இந்த ஸ்மார்ட் போன் இருந்து வருகிறது ஆனால் எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டால்! அதற்கு தேவை இருக்காது என்றே பதில் ஏனென்றால் சில இடங்களில் நாம் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் உங்கள் இணையைப் பார்ப்பதற்கு பதிலாக செல்போனை பார்க்காதீர்கள், கண்விழித்து முதல் வேலையாக செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இது குறித்து சில மருத்துவர்கள் கூறியதை பார்க்கலாம்.
உணவு அருந்தும் பொழுது செல்போனை பயன்படுத்தக் கூடாது, நண்பர்களுடனும் குடும்பத்துடனும் நேரத்தை செலவழிக்க வேண்டும், பிறகு செல்லப்பிராணிகளோடு வெளியில் செல்லும் பொழுது செல்போனை பார்க்கக்கூடாது செல்ல பிராணிகளிடம் நேரத்தை செலவழிக்க வேண்டும். நடந்து செல்லும் பொழுது செல்போனை மட்டுமே பார்த்தபடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
அது மட்டும் இன்றி அக்கம் பக்கம் பார்த்து நடக்க வேண்டும். நான் ஒருவரிடம் நேருக்கு நேர் பேசும் பொழுது அவரது கண்ணை பார்த்து தான் பேச வேண்டுமே தவிர நம்முடைய போனை பார்த்துக்கொண்டு அவர்களிடம் பேசக்கூடாது ஏனென்றால் அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும். பிறகு தொலைக்காட்சி பார்க்கும் பொழுது செல்போனை பார்க்க கூடாது.
நண்பர்களுடனும் அல்லது துணைவியோடோ அமர்ந்து பேசிக்கொண்டே தொலைக்காட்சி பார்க்க வேண்டும். பிறகு கழிவறையில் இருக்கும் பொழுது செல்போனை பயன்படுத்தக் கூடாது இது மிகவும் சுகாதாரமற்ற செயலாகும். அடுத்ததாக நாம் ஒருவரின் இறுதி சடங்கில் இருக்கும் பொழுது சிலவற்றை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும் அந்த வகையில் அவசர நிலையைத் தவிர மற்ற வேலைகளை செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும் இப்பொழுது செல்போன் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அல்லது சத்தமாக பேசுவதையும் தவிர்க்க வேண்டும் அருகில் இருப்பவர்கள் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கேட்டுக் கொள்வார்கள். அப்படி உன் போன் பேசுவது அவசியம் என்றால் சத்தமிடாமல் பேச வேண்டும் . இது போன்ற சமயங்களில் செல்போனை தவிர்ப்பது நல்லது.