வாட்ஸ்அப் விதி முறைகளை மிறிய 65 லட்ச கணக்குகளை முடிகியது மெட்டா நிறுவனம். மெட்டாவிற்கு சொந்தமான அனைவராலும் பயன்படுத்தபடும் வாட்ஸ் அப் நிறுவனம் பல காரணங்களை கொண்டு பல கணக்குகளை முடக்கியுள்ளது.
ஐடி விதிகளின் படி 2021க்கு இணங்க 2023 மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் 65 லட்சம் எண்ணிக்கையிலான வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது. இந்திய சட்டம் அல்லது வாட்ஸ்அப் சேவை விதிமுறைகளை மீறிய காரணத்தால் பயனர்களின் கணக்குகளை பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன் தடை செய்துள்ளது.
வாட்ஸ் அப் அறிக்கையின் படி 2023 மே 1 மற்றும் மே 31-ஆம் தேதி வரை 65,08,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன. மேலும் இவற்றில் 2,420,700 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த ஒரு புகார்களையும் பெறுவதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டன.
இந்தியாவில் 500 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ்அப் கடந்த மே மாதத்தில் 3,912 புகார்களை பெற்றது. இவற்றில் 297 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடவடிக்கை என்பது இந்த புகார்களின் அடிப்படையில் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும் அல்லது ஏற்கனவே முடக்கப்பட்ட வாட்ஸ்அப் கணக்கு மீண்டும் பயன்பாட்டிற்கு கிடைக்கும்.
இந்த பயனர் பாதுகாப்பு அறிக்கையில் வாட்ஸ்அப் கணக்குகள் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதற்காக வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அது மட்டுமல்லாமல் தங்களது தளத்தில் எந்தவித தவறான செயல்களும் நடைபெறாத வண்ணம் வாட்ஸ்அப்பால் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இடம் பெறும். எந்தவிதமான தவறான பயன்பாட்டையும் தவிர்க்க வாட்ஸ்அப் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் மாதத்தில் 24 லட்சம் இந்திய கணக்குகளை முடக்கியது.