Home உலகம் பாகிஸ்தான் முன்னால் பிரதமர் இம்ரான் கான் எதிராக 150 வழக்குகள்…!

பாகிஸ்தான் முன்னால் பிரதமர் இம்ரான் கான் எதிராக 150 வழக்குகள்…!

by Pramila
0 comment

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் , மே 9 அன்று துணை ராணுவ ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார், பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்ததாக இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கைது செய்யப்பட்டதைத் தடுத்த அவரது வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர்.அவர் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர் மீது நாடு முழுவதும் தற்போது 15 0 வழக்குகள் ஆனது, ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட பல  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

70 வயதான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி சமீபத்தில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் (IHC) வழக்குகளின் பட்டியலை சமர்ப்பித்தது. கான் மீது மத்திய தலைநகரில் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் 30 வழக்குகள் மற்றும் அழைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. 

இம்ரான் மீது லாகூரில் 12 பயங்கரவாத வழக்குகளும், பைசலாபாத்தில் 14 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்ரான் கான் மீது நாடு முழுவதும் 22 தீவிரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தற்போது 6 வழக்குகள் அதிகரித்து 150 ஆகா உள்ளது . இம்ரான் கான் பிரதமராக இருந்தகாளத்தில் , ​​பல்வேறு வெளிநாட்டுப் பிரமுகர்கள் அவருக்கு வழங்கிய சில அரசு பரிசுகளை அவர் தக்கவைத்துக்கொண்டதாக விசாரணை நடவடிக்கைகள் தெரியவந்துள்ளன. ஊழல் கீழ் இதற்க்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்ரான் கான்னின் மீது தற்போது இராணுவத்தலைமையகம் தாக்குதல் சார்பாக 3 வழக்குகள், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது.தைபோது அனைத்தையும் பார்க்கும் பொழுது அவருக்கு எதிராக 1 5 0 வழக்குகள் உள்ளது. 

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign