பப்ஜி விளையாட்டின் மூலம் பாகிஸ்தான் பெண்ணுக்கும் இந்தியா இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் வசித்து வந்த 30 வயது பெண் சீமா ஹைதர், இவருடைய கணவர் குலாம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இந்த பெண் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்ற இளைஞருக்கும் பப்ஜி விளையாட்டின் மூலம் காதல் மலர்ந்தது.
இவர்கள் காதல் தீவிரமடைந்த நிலையில் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியா வந்தடைந்தார். இதை தொடர்ந்து கடந்த மே மாதம் நேபாளம் வழியாக இந்தியா வந்தடைந்த சீமான் சச்சின் உடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.
தன்னுடைய 4 குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். சீமா சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்தது போலீசார் கவனத்திற்கு சென்றது. இதை தொடர்ந்து சீமான் மற்றும் அவர் காதலன் சச்சின், சச்சின் தந்தை ஆகியோரே போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு வெயில் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து சீமா கணவர் வீடியோ காணொளி மூலமாக இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியது தன் மனைவி மற்றும் தனது 4 குழந்தைகளை பாகிஸ்தானிற்கு திரும்பி அனுப்பி வைக்குமாறு இந்திய அரசிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.